கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டார் பாத்திமா. கூலி வேலைக்கு செல்லும் அவருக்கு கிடைக்கும் பணம் சொற்பத்தொகை தான். இருந்தாலும் வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் உறுதியாக இருந்தது. வேலைக்கு சென்று வரும் வழியில் 2000 ரூபாய் தாளை கண்டெடுத்தாள். அதை 1 மாதம் வீட்டுச்செலவிற்கு வைத்துக்கொள்ளலாம். இருந்தாலும் அவருடைய மனம் அதனை விரும்பவில்லை. அருகிலிருந்த அன்பு இல்லத்திற்கு சென்றாள். அங்குள்ள முதியவர்கள் சாப்பிட அத்தொகையை நன்கொடையாக வழங்கிவிட்டு தன் வீட்டிற்கு வந்தாள். பாத்திமா வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தை முதலாளி இருமடங்காக்கினார். இச்செய்தியை பக்கத்துவீட்டு பரிமளா சொன்ன போது அவள் மனதில் செம்மைக்கான உறுதி இன்னும் தீர்க்கமானது.