நாகர்கோவில்: அரசு அறிவிப்பின் படி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இன்றுதான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுளில் நேற்று முன்தினம் இரவு பிறை கண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கேரளாவில் நேற்று ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குமரி மாவட்ட உலமாக்கள் சபையினர் கூடி குமரி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை ஞாயிறு அன்று நடைபெறும் என்று அறிவித்தனர். அதன் படி குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் அனைத்து பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம் மக்கள் கலந்து தொழுகை நடத்தினர்.