கோவில்பட்டி:கோவில்பட்டியில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா நடந்தது. கோவில்பட்டி ஸ்ரீஹரே கிருஷ்ணா உழவாரப்பணி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி திருவிழா நடந்தது. திருவிழா கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியய்யர் செய்தார். இதையடுத்து ராதே கிருஷ்ணா சிலைகளுக்கு மகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும் ஸ்ரீவைகுண்டம் சதாசிவதாஸ் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி பேசினார். இதையடுத்து ராமகீர்த்தனம், அன்னதானம் மற்றும் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழகம் சார்பில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கிருஷ்ணர் போல வேடமணிந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். இரவில் கிருஷ்ணர் புறப்பாடு மற்றும் நிறைவு விழா நடந்தது. ஏற்பாடுகளை பிரபு, செந்தில், நந்தகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.