மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று நடந்த சுமங்கலி பூஜையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன்
இதையொட்டி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 5.30 மணிக்கு நடந்த சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், ஆப்பிள், மஞ்சள் நூல், குங்குமம், மஞ்சள், தேங்காய், வளையல், லட்டு, பட்டு சேலை , ஜாக்கெட் துணி ஆகியவை ஸ்டீல் தாம்பூளத்தில் வைத்து வழங்கப்பட்டது. பூஜையில் ஆயிரக்கணக்கான சுமங்கலிகள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5,001 பேர் பங்கேற்கும் அஸ்வதி பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. மூன்றாம் நாளான நாளை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமயவகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தா பூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை , கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.