சடச்சி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2022 11:09
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் கள்ளர் தெருவில் உள்ள சடச்சி முத்துமாரியம்மன் கோயிலில் 49 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.
கடந்த செப்.4 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் சடச்சி முத்து மாரியம்மனுக்கு தொடர்ந்து பத்து நாட்களும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 10 மணி அளவில் லட்சுமிபுரம் ஊரணி கரையிலிருந்து 108 பால்குடம் சுமந்து பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவில் சர்வ மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை 4 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் ஊரணி கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.