பதிவு செய்த நாள்
14
செப்
2022
09:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா, வரும், 17ம் தேதி முதல் துவங்குகிறது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், விரதம் இருக்கும் பக்தர்கள், கோவில் முன்பாக உள்ள தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா வரும், 17ம் தேதி தூங்குகிறது. அதை அடுத்து, 24 ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விழாவும், 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி நவராத்திரி உற்சவம் ஆரம்பம் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி மூன்றாம் சனிக்கிழமையும், நான்காம் தேதி சரஸ்வதி பூஜையும், ஐந்தாம் தேதி விஜயதசமியும், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் வைபவமும், எட்டாம் தேதி நான்காவது சனிக்கிழமை, 15ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார்.