பண்ருட்டி: பண்ருட்டி அருகே கட்டடப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால விஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சி ரேஷன் கடையின் பின்புறம் வி.ஏ.ஓ. அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டிய போது விஷ்ணு கற்சிலை தென்பட்டது.சிலையை சுத்தம் செய்து ரேஷன் கடையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர். இச்சிலை குறித்து கல்வெட்டு ஆய்வாளர் இம்மானுவேல் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிலை. நான்கரை அடி உயரம் ஒன்றரை அடி அகலத்தில் நின்ற கோலத்தில் உள்ளது என்றார்.தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில் இந்த விஷ்ணு கற்சிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.