பதிவு செய்த நாள்
15
செப்
2022
02:09
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சி மார்க்கம்பட்டி விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி செப்.12 பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் நிறைந்த கலசம் மற்றும் முளைப்பாரி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கிராம சாந்தி, நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், கனி மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்டா பூஜைகளும், செப்.13 கோபுர கலச பிரதிஷ்டை, ருத்ர ஜெபம், வேதபாராயணம், எந்திர ஸ்தாபனம், நவரத்தின ஸ்தாபனம், எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட மூன்று கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் கடன் புறப்பாடு நடந்தது. பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றி விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோவில்களில் கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனித நீரும் பூஜை மலர்களும் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமராசு, மாவட்ட கவுன்சிலர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.