புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி தெற்குத்தெரு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி தெற்குத்தெருவில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்துவதற்கு செல்லப்பன், நீலமேகம், அன்பழகன்,கணேசன், சூரியசேகர், மேகன்ராஜ், செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் கொண்ட விழா குழுவினர் அமைத்தனர். குழுவினர் வரி வசூல் செய்து கோவிலை புதுப்பித்தனர். இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 14 ம் தேதி காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை,கணபதி ஹோமம் மற்றும் வாஸ்த்துசாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இன்று காலை 5.30 மணிக்கு கோபூஜையுடன் இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. காலை 8.00மணிக்கு கடம்புறப்பாடு துவங்கி கோவிலை வலம் வந்து கலசத்தில் புனித நீர் ஊற்றி ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவள்ளிகலியமூர்த்தி தலைமையில் கும்பாபிஷேகத்தை புவனகிரி ஆனந்தகுமார் சிவம் நடத்தி வைத்தார். சுற்றுபகுதியினர்பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நாளை முதல் மண்டல அபிஷேக பூஜைகள் நடக்கிறது.