பதிவு செய்த நாள்
23
செப்
2022
10:09
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2 கோடியே 71 லட்சம் கிடைத்துள்ளது.
பழநியில் மலைக்கோயிலில் செப்.,21,22ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (செப்.,22ல்) காணிக்கையாக 202 கிராம் தங்கமும், 1,444 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 81 லட்சத்து 78 ஆயிரத்து 590 மற்றும் 364 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1085 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 441 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 71 லட்சத்து 48 ஆயிரத்து 290, மற்றும் 2406 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன், சத்யா மற்றும் மதுரை துணை ஆணையர், பொன் சுவாமிநாதன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.