குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா துவங்கியது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 07:09
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரை கிராமம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் கோயில். ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது இங்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். காளி உள்பட பல்வேறு வேடமிட்டு காணிக்கை பெறுவார்கள். அக்.5ல் குலசேகரபட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் நடக்கும் மகிஷாசூரசம்ஹார நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விழா நடக்கிறது. நேற்று காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதி உலா வந்தது. தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் தீபாராதனை நடந்தது. நேற்று இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் கோலத்தில் எழுந்தருளினார். அக்.5., வரை தினமும் அபிசேக, ஆராதனை இரவில் வீதி உலா நடக்கிறது. நேற்று திருநெல்வேலி டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் 300 போலீசார் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.