திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 05:09
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் 40 ஆண்டுகாலமாக தேசிகர் தவம் புரிந்து தேவநாதசாமி மற்றும் ஹயக்கிரீவரை வழிபட்டதாக ஐதீகம். அதையொட்டி, இங்குள்ள தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம் மோற்சவவிழா 12 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இரவு அம்ச வாகனம்த்தி்ல் உலா நடந்தது. தெடர்ந்து, இன்று (27ம் தேதி) காலை பல்லக்கு, இரவு தங்கவிமானம், 28ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு யாளி வாகனம், 29ம் தேதி சந்திர பிரபை, 30ம் தேதி வெள்ளி சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. தேர்த்திருவிழா அக்., 4ம் தேதியும், 5ம் தேதி ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்கிரிவர் சன்னதியில் எழுந்தருள்வர். மேலும் அன்றைய தினம் விஜயதசமி என்பதால் விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.