சரவணம்பட்டி: சிவானந்தபுரம் சத்திரோட்டில் உள்ள புரோசோன் மாலில் நவராத்திரி கொண்டாட்டம் துவங்கியது. அக்.5 வரை நடக்கும் இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.
கோவை சத்திரோடு சிவானந்தபுரத்தில் உள்ள புரோசோன் மாலில் நவராத்திரி கொண்டாட்டம் நேற்று முதல் துவங்கியது. வரும் அக்.5 வரை நடக்கும் இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது. புரசோன் மால் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம் ) பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் ஆகியோர் கூறுகையில், " இந்தியாவில் கொண்டாடப்படும் நீண்ட பண்டிகையில் குறிப்பிடத்தக்கது நவராத்திரி விழா. 10 நாட்களுக்கும் மேலாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை காலத்தை கோவை மக்களும் கொண்டாடி மகிழ புரோசோன் மால் வாய்ப்பளிக்கிறது. தினமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டுள்ள மாலில் புதிய நிகழ்வுகள் நடக்கின்றன ஒன்பது நாட்களும் கண்கவர் அலங்கார விளக்குகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இதன் முக்கிய அம்சமாக அக்.1 முதல் 5 வரை மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தாண்டியா, கபர்பா நடனங்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான பாட்டு போட்டிகள், பேன்சி டிரஸ் போட்டிகள், பேமிலி பேஷன் ஷோ இடம் பெறுகின்றன. விழாக்காலங்களை முன்னிட்டு 135க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.