தூணை புடிச்சுகிட்டு இவரை வணங்குங்க பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் ரங்கநாதரை வணங்கச் செல்லும் போது,நான் தூணைப் பற்றிக் கொள்வேன், என்கிறார். அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மனத்தூணே பற்றி நின்று என்பது அவரது பாடல் வரி. எதற்காகத் தூணைப் பிடிக்க வேண்டும்? பெருமாளின் திருவடியைத் தானே பிடிக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும். காரணத்தைச் தெரிந்து கொண்டால் இப்படி சொல்ல மாட்டோம். ரங்கநாதனை கண்டதும் பக்திப்பரவசமாகி, கண்கள் சுழன்று கால்கள் தடுமாறும். அப்போது கீழே விழுந்து விடாமல் பிடிக்க தூண் கேட்டதாக உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.