கோவை : கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் விஜயதசமியான இன்று குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்து அறிவித்து பெற்றோர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.