வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியார் கோவிலில் ஒன்பதாவது வார நவநாள் வழிபாடு மற்றும் தேர்பவனி விழா நடந்தது.விழாவில் கோவை மறை மாவட்ட பொருளாளர் கனகராஜ் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். பிறகு, தாராபுரம் வட்டாரத் தலைமை குழு தலைவர் செல்வராஜ், சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.அன்றிரவு 8 மணியளவில் மி ன் விளக்குகளுடன் அலங்கா ரம் செய்யப்பட்ட தேர்ப்பவனியில் அந்தோணியார் சாமி, வழிபாடல்களுடன், ஊர்வலம் சென்றது.இறுதியாக பங்கு தந்தை ராபர்ட் தலைமையில் திருப் பலிக்கு பின் கொடியிறக்கம் செய்யப்பட்டது. விழாவில் வேலாயுதம் பாளையம், காகிதபுரம், தோட்டக்குறிச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.