காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 10:10
காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் திருவோண தீபமேற்றும் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நாளை முன்னிட்டு நேற்று மூலவர் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.உற்சவர் ஸ்ரீகோதண்டராமர் மற்றும் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீகோதண்டராமர் சன்னிதியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருவோண தீபத்தினால் மூலவர்,உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பித்து திருவோண தீபத்தை பட்டாச்சாரியார் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து ஸ்ரீகோதண்டராமர் சன்னிதி முன்பு வைக்கப்பட்டு பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனையும்,மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.