பதிவு செய்த நாள்
06
அக்
2022
10:10
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோவில், நவராத்திரி விழாவை முன்னிட்டு , கோவிலில் கொழு வைக்கப்பட்டு, நவராத்திரி நாட்கள் முழுவதும், மூலவர், அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு தினமும், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தினமும் நவராத்திரி அலங்காரம் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நவராத்திரி விழாவில் இறுதியாக கோவிலில் மஹிராஷ்வரனை, அம்மன், அம்பு விட்டு வதம் செய்யும் நிகழ்வு, நேற்று மாலை நடைபெற்றது. நடைபெற்ற அம்பு விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.