திருப்பரங்குன்றம் கோயிலில் சுடர்விடும் அணையா விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2022 10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனாவிற்கு பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அணையா விளக்குகள் மீண்டும் சுடர்விடுகின்றன.
கோயிலில் பக்தர்கள் நினைத்த இடங்களிலும், தூண்களிலும் அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தனர். அதனால் தூண்களிலும், படிக்கட்டுகளிலும் எண்ணெய் வடிந்து பாழ்பட்டு வந்தன. இவற்றை தடுக்கும் வகையிலும், பக்தர்கள் தங்கள் கொண்டுவரும் நெய், எண்ணெய்யை ஒரே விளக்கில் ஊற்றி வழிபடவும், 24 மணி நேரமும் கோயிலில் விளக்குகள் ஏறிய வேண்டும் என்பதற்காகவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் ஆஸ்தான மண்டபம், திருவாட்சி மண்டபம், கம்பத்தடி மண்டபத்தில் அணையா விளக்குகள் அமைக்கப்பட்டன. கொரோனா தடை உத்தரவால் கடந்த இரண்டு ஆண்டுகள் கோயிலில் பூஜைகள் மட்டுமே நடத்தப்பட்டது. தற்போது அணையா விளக்குகள் மீண்டும் சுடர் விட துவங்கியுள்ளன. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.