கருமத்தம்பட்டி: செகுடந்தாளி கோவில் விழாவில், பக்தர்கள் கத்தி போட்டு, அம்மனை அழைத்து வந்தனர். கருமத்தம்பட்டி அடுத்த செகுடந்தாளி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, நவராத்திரியை ஒட்டி, ஒன்பது நாட்களும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் விஜய தசமியை ஒட்டி, வன்னி குத்துதல் எனும் அசுரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கத்தி போட்டு, அம்மனை பயபக்தியுடன் அழைத்து வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர்.