கோவில்பாளையம்: குரும்பபாளையம் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது.
கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் பிரசித்தி பெற்ற தலைக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி சாட்டுடன் துவங்கியது. 28ம் தேதி கம்பம் நடும் விழா நடந்தது. அக். 2ம் தேதி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அணிக் கூடை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், கரகம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன, இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை அபிஷேக ஆராதனையும், அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.