நாளைபுரட்டாசி மூன்றாம் சனி; திருவண்ணாமலை கோயிலில் நள்ளிரவு ஒரு மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2022 05:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை (அக்.8) சனிக்கிழமை நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமையில் ஒரு மடங்கு பக்தர்கள் கூடுதலாக வருவார்கள். இதனால் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு, நாளை நள்ளிரவு 01:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அதன் பின்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தேவையான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம், போலீஸ், போக்குவரத்து, உள்ளாட்சி துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.