அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2022 10:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் என்று அழைக்கப்படும் அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 39 வது திவ்யதேசம் ஆகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை விழாவில் 11 வது நாளான நேற்று இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் தாயார், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பம் மூன்று முறை குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை சேவித்தனர் செய்தனர்.