திருவந்திபுரத்தில் குவிந்த பக்தர்கள் : மொட்டை அடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2022 07:10
கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றது. புரட்டாசி மாதம் இரண்டு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ததோடு, தினமும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, முதல் நாளான நேற்றே பக்தர்களின் கூட்டம் கோவிலில் அலைமோதியது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்துக்கொண்டு, கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் குவிந்ததால் கோவில் சுற்றி நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.