செஞ்சி: செஞ்சி திருவண்ணாமலை ரோடு ராஜ செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது செஞ்சி திருவண்ணாமலை ரோடு பி.டி.ஓ.. ஆபிஸ் எதிரில் உள்ள ராஜசெல்வ விநாயகர் மற்றும் நவகிரக கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தேதி நவகிரக சிலைகள் கரிக்கோல ஊர்வலமும், மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, நவகிரக ஹோமம் மற்றும் முதல் கால ஹோமமும் நடந்தது. அன்று இரவு 10 மணிக்கு ராஜ செல்வ விநாயகர் மற்றும் நவகிரக சிலைகள் அஷ்டபந்தன மருந்து சாற்றி பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, 108 மூலிகைகளால் இரண்டாம் கால ஹோமமும் நடந்தது. 8.30 மணிக்கு மகாபூர்ணஹுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. ஒன்பது மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.