பதிவு செய்த நாள்
10
அக்
2022
08:10
செஞ்சி: கல்லாலிப்பட்டு முனீஸ்வரன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செஞ்சி அடுத்த கல்லாலிப்பட்டு கிராமத்தில் உள்ள பால விநாயகர், வீரன், முனீஸ்வரன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா நேற்று நடத்தது. அதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மங்கள இசையும், புண்ணியா ஹவாசனம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்ஷா பந்தனம் நடந்தது. இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணாஹுதியும். இரவு 10 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு மங்கள இசை, கோ பூஜை, வேதிகா பூஜை , நாடி சந்தானம், தத்துவர்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 7.15 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடும், 7.45 மணிக்கு முனீஸ்வரனுக்கு மகா கும்பாபிஷேகமும், மகாதீபாரதனையும் நடந்தது. இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கினர்.