கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி நாடு முன்னாள் முகுந்தன் ஆண்டதலம் ஆகும். உலகத்திலேயே இங்கு தான் மனிதனின் தலைவிதியை நிர்ணயிக்கும் மூத்த நயினாருக்கு பதி உள்ளது. சிறப்பு வாய்ந்த முட்டப்பதி மூத்த நயினார் அய்யா பதியில் புரட்டாசி மாத பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடந்தது. அதை தொடர்ந்து 1008 எலுமிச்சம் பழம் மற்றும் பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அய்யா எழுந்தருளி ப தியை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது அய்யா வழி ப க்தர்கள் "அய்யா அரகரசிவ சிவா" என்ற பக்தி கோஷத்தை விண்ணதிர எழுப்பிய படி வலம் வந்தனர். அய்யா எழுந்தருளி இருந்த கருட வாகனம் வடக்கு வாசல் வரும் போது அய்யா வழி பக்தர்கள் அய்யாவுக்கு தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். வாகனப வனி முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நெல்லை , குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, முட்டப்பதி மூத்தநயினார் அய்யாபதி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.