காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் விசாகப்பட்டினம் சாரதா ஆசிரமத்தில் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2022 10:10
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடம் (ஆசிரமத்தில் ) "பஞ்சாராமாலு - அபிஷேக திரவியாலு" என்ற( தலைப்பு) என்பது குறித்தான ஆலோசனை மற்றும் தீர்மானங்கள் குறித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களில் நடக்கும் அபிஷேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது . மாநில அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் மாநில அறநிலைத்துறை ஆணையாளர் முன்னிலையில் சாரதா மடப்பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ருபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி தலைமையில் ஆலோசனைக்(. கூட்டம்) நடைபெற்றது மாநில அறநிலைத்துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயிலின் பிரதான அர்ச்சகர் மற்றும் வேத பண்டிதர்கள் கலந்துகொண்டனர் .முன்னதாக கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் வேத பண்டிதர்கள் சாரதா பீடாதிபதியை சந்தித்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையாரின் தீர்த்த பிரசாதனங்களையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் நடக்கும் அபிஷேகங்கள் மற்றும் செய்யும் முறைகள் பற்றி கோயில் பிரதான அர்ச்சகர் ஆன சம்பந்தம் குருக்கள் பிடாதிபதியிடம் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரியுடன் கோயில் பிரதான அர்ச்சகர் ஆனா கருணா குருக்கள்,தக்ஷிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ,தாமோதர சர்மா , ராஜா வைத்தீஸ்வரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.