மத்திய பிரதேசம் மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்த மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2022 07:10
போபால்: ம.பி., சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்தார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மஹாகாலேஷ்வர் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒரு தலமாக திகழ்கிறது. பாரம்பரியம் மிக்க இந்தக் கோவில் 856 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 316 கோடி ரூபாய் செலவில் நடைபாதை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இந்தக் கோவிலுக்கு மாலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பணி நிறைவு பெற்ற பகுதிகளை திறந்து வைத்தார்.பின், மஹாகாலேஷ்வரருக்கு பூஜை செய்து வழிபட்டார். இதில், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மோடி பேசினார்.