பதிவு செய்த நாள்
12
அக்
2022
08:10
தேனி : பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் கிரிவலப் பாதையில் ஸ்ரீஜிஜி லாஅல் சித்பாபாஜி சேவாஸ்ரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நான்கு கால பிரித்தியங்கரா தேவி யாகம் உலக மக்கள் நன்மைக்காக பாபாஜி ஆசிர்வாதத்துடன் நடந்தது. யாகத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தலைமை வகித்தார். டில்லி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற ஆனந்த்சாகு துவக்கி வைத்தார். அன்னதானத்தை வினோரா பவுண்டேஷன் இயக்குனர் ராஜன், போடி ராஜாஅழகனன் துவக்கி வைத்தனர். யாகத்தில் தேனி இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், வழக்கறிஞர் சுபாஷ் பாபு ராதாகிருஷ்ணன், குறிஞ்சி வெங்கடேசன், குலோத்துங்கன், மாஸ்டர் சி.சி.டி.வி., செந்தில், அருண்பாஸ்கர், சென்னை நித்யா கிருத்திகா, பிரசன்னா கலந்து கொண்டனர். அங்கு நடந்த மருத்துவ முகாமை சேவாஸ்ரம் தலைமை நிர்வாகி முத்துராமன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள், வழக்கறிஞர் அப்பாதுரை, சரவணன் கலந்து கொண்டனர். ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.