பதிவு செய்த நாள்
12
அக்
2022
01:10
எட்டயபுரம்: எட்டயபுரம், டக்கு ரதவீதியில் அமைந்துள்ள கீரை மஸ்தான் கோயிலில், நேற்று குருபூஜை விழா நடந்தது. எட்டயபுரத்தில் வாழ்ந்து முக்தியடைந்தவர் தவசி தம்பிரான் மகாசித்தர். இவருடைய சீடராக, மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு துறவி, எட்டயபுரத்திற்கு வந்து தன்னுடைய குருவிற்கு பணிவிடைகள் துவந்தார். தவசி தம்பிரான் சித்தர் முக்தியடைந்த பிற்கு, எட்டயபுரத்திலேயே அந்த சீடர் தங்கிவிட்டார். அவர் தினசரி உணவு, கீரையை நன்றாகக் கடைந்து அந்தக் கீரை மசியலை மட்டுமே. இதனால் இவர் ‘கீரை மசியல் சித்தர்’ எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கீரை மஸ்தான் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். பல சித்துவிளையாடல்கள் புரிந்து, நோயுள்ள பலரை குணப்படுத்தினார். எட்டயபுரம் குதியில் ாழ்ந்த கீரை மஸ்தான் சுவாமிகள், கடந்த 1864ம் ஆண்டு புரட்டாசி மாதம் அசுபதி நட்சத்திரத்தில் சித்தியடைந்தார். அன்றிலிருந்து,எட்டயபுரம் எட்டப்ப மன்னர் சமஸ்தானத்திலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அசுபதி சத்திரம் அன்று, கீரைமஸ்தான் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் து குருபூஜை நடத்தி வருகின்றனர். நேற்று புரட்டாசி அசுபதி நட்சத்திரத்தில், சமஸ்தானத்திலிருந்து வழக்கம் போல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடைகளும் வழங்கப்பட்டது. கோயில் பூஜைகளை, சமஸ்தான ஆச்சாரியார் பரசுராம்சுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்திருந்தார். எட்டயபுரம் மற்றும் சுற்றுபுற பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.