துாத்துக்குடி: புதுார் வீரமாகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு வாகைக்குளம் கண்மாய்கரை கரையடி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட புனிதநீர் மூலம் புதுார் ஆதிலிங்கேஸ்வர் கோயிலில் அபிஷேக ஆராதனையும் பின்னர் சிவன் கோயில் புனிதநீரால் புதுார் வீரமாகாளியம்மன் கோயில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தன. இரவு 10 மணிக்கு பொங்கலிடுதல் கரகம் எடுத்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று காலை கிடா வெட்டுதல், மாலையில் கும்மி, கரகாட்டம், சிலம்பாட்டம் நடக்க உள்ளது. இரவு 10 மணிக்கு சத்திய அரிச்சந்திர நாடகம் நடக்கிறது. 13ம் தேதி வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம், 14ம் தேதி பட்டிமன்ற நிகழ்ச்சி, நடக்க உள்ளது . கோயில் கொடைவிழா தக்கார் சுப்பிரமணியன் தலைமையில் நடக்கிறது.