கடலுார் : கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 17 லட்சத்து 15 ஆயிரத்து 204 ரூபாய் வசூலானது.
கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 17 லட்சத்து 15 ஆயிரத்து 204 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். வெள்ளிப் பொருட்கள் 190 கிராம், நகைகள் 158 கிராம் காணிக்கையாக இருந்தது.