* சிறியவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுங்கள். அவர்களது எதிர்காலம் ஜொலிக்கும். * வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருங்கள். உயர்வு உறுதி. * கிடைக்கும் நேரத்தை நல்லவற்றிற்கு பயன்படுத்துங்கள். * நற்செயல்கள் செய்ய மனதில் ஏக்கம் வர வேண்டும். * ஆடம்பரத்திற்காக ஆடைகளை அணியாதீர்கள். * பிறரின் சிந்தனையை துாண்டுவது பெரிதல்ல. அவை நல்லவிதமாக இருக்க வேண்டும். * உறவினர்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்து விடுங்கள். * பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. * கூடவே இருந்து ஒருவர் துரோகம் செய்தால் அவரை தர்மம் தண்டிக்கும். – பொன்மொழிகள்.