கிராமத்தின் எல்லையில் அவ்வழியாக செல்பவர்களை குடிகாரன் ஒருவன் திட்டினான். பலர் அறிவுரை சொல்லியும் திருந்த வில்லை. ஒருநாள் அவ்வழியாக வந்த ஞானியையும் திட்டினான். மறுநாள் அவனிடம்,‘‘அன்பரே இனிமேல் நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். நீங்கள் அணிவதற்கு துாய்மையான ஆடைகளை கொண்டு வந்துள்ளேன் பெற்றுக்கொள்’’ என்றார் ஞானி. அதற்கு அவரும் ‘‘எனது தாக்குதலுக்கு எல்லோரும் பயந்து ஓடியிருக்கிறார்கள். தாங்கள் மட்டும் அவமானப்படுத்தியவரிடமும் அன்பு காட்டுகிறீர்களே’’ என சொல்லி அவரிடம் மன்னிப்புக்கேட்டான். அன்பின் வலிமையை அவன் உணர்ந்தான்.