சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது.சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளை கார்த்திக் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்தார். நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை சுந்தர் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை சோமசுந்தரம் செய்திருந்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.