புரட்டாசி கடைசி சனி பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2022 08:10
காரமடை : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.