பதிவு செய்த நாள்
17
அக்
2022
08:10
சரவணம்பட்டி: சரவணம்பட்டி கரியபெருமாள் கோயிலில் ஐந்து நாட்கள் கோலகலமாக நடந்த பிரமோற்சவ விழா இனிதே நிறைவுற்றது.
கோவை, சரவணம்பட்டியில் கரியபெருமாள் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இங்கு 13ம் ஆண்டு பிரமேற்ச விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேருபராதீனம் மருதாசல அடிகள் துவக்கி வைத்தனர். ஐந்து நாட்கள் யாகசாலை நிகழ்ச்சிகள் நடந்தன. நான்காம் நாள் நிகழ்ச்சியாக கருடசேவை, அலங்கார குதிரை வானவேடிக்கை, செண்டை வாத்தியம் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமி திருவீதி உலா, ஆண்டாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. ஐந்தாம் நாளான நேற்று, காலை 8.30 மணி முதல் விஸ்வருபம், புண்யாவாசனம், திருத்தேர் எழுந்தருளல், தீர்த்தவாரி உற்சவம், கொடியிறக்கம், பச்சைபட்டு உடுத்தி சுவாமி புறப்பாடு, திருவாரதனம், சாற்றுமுறை கோஷ்டி நிகழ்ச்சிகள் நடந்தன. நன்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை வரதராஜபெருமாள் திருக்கோயில் வழிபாட்டு மன்றத்தினர், அறங்காவலர் நாகராஜ் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.