ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள திருநீலகண்டேஸ்வர சுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் விளக்கேந்தி சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தனர்.