தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில், நுழைவாயிலில் உள்ள கோபுரம்தான் உயரமாக இருக்கும். ஆனால், தஞ்சையில் ராஜ ராஜ÷ சாழன் கட்டிய பெரிய கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலிலும் மூலஸ்தானத்தின் மீதே உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரு கோயில் கோபுரங்களின் நிழல் தரையில் விழாது என்பது தனிச்சிறப்பு.