கோயிலில் விபூதியை வாங்கும்போது பின்பற்ற வேண்டிய சில விதி முறைகள்:- 1. விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையால், வாங்கக் கூடாது. வலது கையின் கீழே இடது கையை சேர்த்து வைத்து வாங்க வேண்டும். 2. வலது கையில் பெற்றுக் கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் பூசுவது நல்லது அல்லது விபூதியை சிறு காகிதத்தில் இட்டு, அதில் இருந்து எடுத்து வலது கை விரலால் எடுத்து பூசலாம். 3. நம்மைவிட இளையவர் கையில் இருந்து விபூதியை எடுத்து பூசக் கூடாது. அதே நேரங்களில், நமது கையில் வாங்கிக் கொண்டு, அதில் இருந்து எடுத்து பூசிக் கொள்ளலாம். அதேநேரம், குங்குமத்தை இளையவர் கையில் இருந்து எடுத்து பூசிக் கொள்வதில் தவறு கிடையாது. 4. விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. கரும காரியங்கள் செய்யும்போது மட்டும் நீரில் குழைத்து பூசிக் கொள்ளலாம்.