முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தில் விநாயகர், வாலாருடைய அய்யனார்,காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் பின்பு மண்டலபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை நடந்தது.பின்பு விநாயகர், வாலாருடைய அய்யனார், காளியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள்,திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், திபாரதனை நடந்தது.கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.