பதிவு செய்த நாள்
21
அக்
2022
02:10
பொங்கலூர் பெரியாரியபட்டி கற்பக விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா புதன்கிழமை துவங்கியது. புதன்கிழமை விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனை, பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரம ஹோமம், முளைப்பாலிகை, தீர்த்த கலசம், கோபுர கலசம் மாகாளியம்மன் கோவில் அழைத்து வருதல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதற்காலையாக பூஜை, கோபுரத்தில் கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடந்தது.
நேற்று இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்படுதல் நடந்தது. தொடர்ந்து விமான கோபுரங்கள், கற்பக விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கண்டியன் கோவில் ஆதீனம் சிவசுப்பிரமணிய குருக்கள், தங்கமணி குருக்கள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசனம், மகாதீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.