ராஜமுந்திரி: ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ராஜமுந்திரியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மாண்டபேட்டாவில் இருந்து சென்ற அவரை பூப்பல்லக்கில் அமர வைத்து அழைத்து சென்றனர். வழியில் ஓலப்பள்ளி காஞ்சி காமகோடி ஸ்மார்த்த வேதபாடசாலையை அவர் பார்வையிட்டார். ராஜமுந்திரி வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கும் சென்றார். அக்., 27 வரை அங்கு முகாமிட்டிருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறுநாள் முதல் முக்கமாலா கிராமத்தில் முகாமிடுகிறார். அங்கு நவ.,10 வரை தங்கியிருப்பார். அங்கு சுக்ரவாரம், பிரதோஷ பூஜைகளை நடத்தவுள்ளார்.