ராமேஸ்வரம்: தீபாவளி பண்டிகையால் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
அக்., 24ல் தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி, தமிழகத்தில் ஜவுளி, இனிப்பு, மளிகை கடைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயிர்கள் வருகை தரும் நிலையில், நேற்று பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால் கோயில் அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகம், ரதவீதிகளில் பக்தர்கள் நடமாட்டம், நீராடல் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், உணவு ஓட்டல்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.