திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.25 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2022 01:10
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.25 ல் துவங்குகிறது. அக்.30 ல் சூரசம்ஹாரம் நடைபெறும்.
குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் நடைபெறும். கொரோனா தடை ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அக் 25ல் சூரிய கிரகணம் முடிந்த பின்னர். மாலை 7:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் விழா துவங்குகிறது. தினசரி மாலையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அக்.30 ஆறாம் திருநாளில் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். மறுநாள் காலை 9:30 மணி அளவில் சுப்பிரமணியசுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை தேவஸ்தானம், திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.