தேவகோட்டை சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழா 25ந் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2022 10:10
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் அக் 25 ந்தேதி பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஒன்பது நாட்கள் கந்த சஷ்டி கழகம் சார்பில் தினமும் பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெறவுள்ளது. 25ந்தேதி முதல் 5 தினங்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஒன்பது தினங்கள் முருக பெருமான் சிறப்பு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருகிறார். ஆறாம் நாள் கோவில் எதிரே உள்ள திடலில் முருக பெருமான் சூரனை சம்ஹாரம் செய்கிறார். ஏழாம் நாள் தெய்வானை கல்யாணமும், 8 ம் நாள் வள்ளி கல்யாணமும் முடிந்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவர்.
ஆண்டு விழா: கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழா அக். 24 ந்தேதி முதல் முருக வேள் சதுக்கத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவை. அண்ணாமலை பல்கலை கழக துணை வேந்தர் துவக்கி வைக்கிறார். திருச்சி கல்யாணராமன் இலக்கிய உரையாற்றுகிறார். இலக்கியம், இசை, நாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி கழகம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.