பதிவு செய்த நாள்
25
அக்
2022
05:10
ராமநாதபுரம் : தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன், பெருமாள், அம்மன் கோயிலில் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தன. புத்தாடை அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் அரண்மனை பின்புறம் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதே போல் கோதண்ட ராமர் கோயில், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், பஸ் ஸ்டாண்ட் அருகே வழிவிடுமுருகன் கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதிநகர்கலெக்டர் அலுவலக வளாகம் மல்லம்மாள் காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷக வழிபாடு நடந்தது. புத்தாடை அணிந்து பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி மூலவர்களுக்கு 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
புத்தாடைகள் அணிந்து அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் மற்றும்வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.---
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர்,தொண்டி உந்திபூத்த பெருமாள், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர்கோயில்களில் தீபாவளியைமுன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தீபாராதனையின் போது ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உழவர் பரம சுவாமி திருப்பதி திருக்கோலத்தில்வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் சேவை சாதித்தார்.
தொடர்ந்து காலை முதல் மதியம் வரையும் மற்றும் மாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் பெருமாள், திருப்பதி அலங்கார சேவையில் உற்ஸவர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி அனுமார் கோதண்ட ராம சுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள், பொது மக்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.