ராஜ அலங்காரத்தில் கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2022 06:10
தஞ்சாவூர்,கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று(25ம் தேதி) ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பட்டு ஆடைகளை கொண்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில்,விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.