ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2022 08:10
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி 3ம் நாள் விழாவில் ஆறுமுக சுவாமி வீதியுலா நடைபெற்றது.
கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கந்தசஷ்டி விழா நடைபெற்றுவருகிறது.இதனையொட்டி நேற்று காலை 10 மணி முதல் மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.இரவு வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனையும் அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. இரவு ஆறுமுக சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.நள்ளிரவு 12 மணிக்கு காளி எழுந்தருளும் நிகழ்ச்சியும்,வாசாப்பு வாசித்தலும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.